
'அடியே காந்தா’.! 'நடிகவேள்' எம்.ஆர்.ராதா பிறந்தநாள் இன்று
பிறவிக் கலைஞனான எம்.ஆர்.ராதாவின் பிறந்த நாளான இன்று..! எம்.ஆர். ராதா என்றால் சட்டென நினைவுக்கு வரும் படம் 'ரத்தக்கண்ணீர்'. அப்படம் அவரது திரைவாழ்வில் ஓர் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என எம்.ஆர்.ராதா ஏற்காத பாத்திரங்களே கிடையாது என சொல்லும் அளவிற்கு ஏற்ற அத்தனை பாத்திரங்களிலும் தன்னுடைய தனி முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.