தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் உணவுகள் வீணாக்கப்பட்ட சம்பவம் பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு நோன்பு திறந்தார். அதன்பின் விருந்து அளிக்கப்பட்டது. மக்கள் முண்டியடித்து பிரியாணி வாங்க முயற்சித்ததால், ஆங்காங்கே உணவு பொருட்கள் சிதறி வீணானது. மேலும், சரியான திட்டமிடல் இல்லை என புகார்கள் குவிந்து வருகிறது.