
திண்டுக்கல்: 10-ஆம் வகுப்பு தோ்வை 24, 267 மாணவா்கள் எழுதினா்
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 348 பள்ளிகளைச் சேர்ந்த 12,599 மாணவர்கள், 12,523 மாணவிகள் என மொத்தம் 25,122 மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10,838 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9,761 மாணவர்கள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 4,523 மாணவர்கள் என மொத்தம் 25,122 மாணவர்கள் இடம் பெற்றனர். இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 65 தேர்வுக் கூடங்கள், பழனி கல்வி மாவட்டத்தில் 47 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தமிழ் பாடத் தேர்வை 25,256 மாணவர்களில், 24,267 பேர் தேர்வு எழுதினர். 580 மாணவர்கள், 275 மாணவிகள் என மொத்தம் 855 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.