வேடசந்தூர் அருகே உள்ள விட்டல் நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (வயது 63). இவரது மனைவி சவடம்மாள் (58) செங்கல்சூளை தொழிலாளி. இவர்களது மகன் மனோஜ்குமார் (13) பள்ளி மாணவர். இவர்கள் அனைவரும் தங்களது வேலைக்குச் சென்று விட்ட நிலையில் வீட்டின் விட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டின் உள்ளே புகுந்த நபர் வீட்டில் உள்ளே வைத்திருந்த அண்டாவுக்குள் துணிகளை போட்டு மூடி வைத்திருந்த ஐந்து பவுன் நகை பணம் பத்தாயிரத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் கதவை பூட்டி சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு சென்று விட்டார். இதுகுறித்து சுப்பிரமணி வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வேடசந்தூர் போலீசார் அண்டாவுக்குள் வைத்திருந்த நகை பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.