திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கானா பாடி மாலா பட்டியைச் சேர்ந்த முருகராஜ் அவருடைய மனைவி பாக்கியலட்சுமி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இருவரும் நூற்பாளைக்கு வேலைக்கு சென்று விட்டனர். பூட்டி இருந்த வீட்டின் சாவியை எடுத்த மர்ம நபர் அலமாரியில் வைத்திருந்த ஏழரை பவுன் தங்கச் சங்கிலி கம்மல் உள்ளிட்ட நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டி மீண்டும் சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு சென்று விட்டனர். மாலை வீட்டில் வந்து பார்த்த இருவரும் அதிர்ச்சி அடைந்து வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.