தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இன்று (மார்ச் 27) நேரில் சந்தித்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ், முதல் அழைப்பிதழ் பத்திரிக்கையை வழங்கினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.