முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்

72பார்த்தது
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ்-கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், அதிமுகவினர் உடன் பேசாமல் இருந்தார். பழனிசாமி பெயரை உச்சரிப்பதை தவிர்த்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லி பயணம் செய்திருக்கிறார். இபிஎஸ் சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்த நிலையில் செங்கோட்டையனும் டெல்லி சென்றுள்ளார். அங்கு, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி