வாட்சப்பில் நாம் வைக்கும் ஸ்டேட்டஸுடன், இனி பாடலையும் பதிவு செய்யும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைக்கும்போது, பாடலை ஸ்டேட்டஸ் வைக்கலாம். அதேபோல், இனி வாட்சப்பில், மியூசிக் ஐகானை தொட்டு நமக்குப் பிடித்த பாடலைத் தேர்வு செய்து ஸ்டேட்டஸ் வைக்கலாம். அப்புறம் என்ன? உடனே போங்க, உங்கள் மனதில் உள்ள பாடலை வாட்ஸப்பிலும் ஷேர் பண்ணுங்க.