நத்தம்: இருசக்கர வாகனத்தில் திடீரென பற்றி எரிந்த தீ

69பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு மகன் ரஞ்சித் (வயது 28). இவர் நத்தத்திலிருந்து உலுப்பகுடிக்கு அவரது இருசக்கர வாகனத்தில் (பஜாஜ் டெர்மினேட்டர்) சென்று கொண்டிருந்தார். அப்போது சேர்வீடு பிரிவு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில்  இருந்த ரேடியேட்டர் திடீரென வெடித்து புகை கிளம்பியது. இதையடுத்து ரஞ்சித் இருசக்கர வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்தினார். சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய துவங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்த ரஞ்சித் காயம் ஏதும் இன்றி தப்பினார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி