கருங்கல் ஊராட்சி சின்னத்தம்பிபட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சரவணன் மனைவி, போதும் பொண்ணு 35. இரு குழந்தைகள் உள்ளனர்.
பாளையம் கடைவீதிக்கு வந்தவர், அரவக்குறிச்சி பிரிவு ரோடு அருகே உள்ள
கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு திரும்பி உள்ளார்.
அப்போது பாளையம் வழியாக அரவக்குறிச்சி நோக்கி சென்ற கனரக லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே போதும் பொண்ணு இறந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.