விட்டல்நாயக்கன்பட்டி அருகே உள்ள சென்னிஸ் துணிக்கடை அருகே ஓரமாக நிறுத்தி இருந்த நூற்பாளை தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன்மீது மோதிவிட்டு நிற்காமல் லாரி ஒன்று சென்று விட்டது. இதில் வேனில் உள்ளே அமர்ந்திருந்த தண்ணீர் பந்தம் பட்டியைச் சேர்ந்த ராஜாமணி சம்பவ இடத்திலேயே பலியானார். வேனில் இருந்த 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை சிசிடிவி காட்சி அடிப்படையில் பிடித்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கவனக்குறைவாகவும் அஜாக்கிரதை ஆகவும் அதிவேகமாகவும் லாரியை ஓட்டி வந்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.