சேலம்: தலைவாசல் அருகே வீரகனூரில் கால்நடை சந்தை அமைந்துள்ளது. தமிழகத்தில் பெரிய சந்தைகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு வீரகனூர், தலைவாசல், கெங்கவல்லி, ஆத்தூர், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்தும் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சியில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஒரு ஆடு ரூ.3,500 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.