எரியோடு: இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு

71பார்த்தது
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திண்டுக்கல் அருகே எரியோடு அருகே குண்டாம்பட்டி பிரிவு அண்ணா நகர் மக்கள் பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளதாவது:
திண்டுக்கல் மாவட்டம்
எரியோடு அருகே குண்டாம் பட்டி பிரிவு அண்ணா நகரில் கடந்த 45 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்திருந்தோம். எங்கள் அண்ணா நகர் பகுதியில் 18 குடியிருப்புகள் இருந்தது. அதில் 5 குடியிருப்புக்களுக்கு மட்டும் இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டு உள்ளது. எங்கள் 13 குடியிருப்புகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படாமல் உள்ளனர். ஆகையால் கலெக்டர் இதனை விசாரணை செய்து எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி