நத்தம்: தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

80பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி பகுதியில் ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் கோவில் திருப்பணி குழு வேலைகள் நடைபெற்று வருகிறது. இங்கு பல வருடங்களாக இந்த கோவிலின் காரணக்காரராக இருந்து வந்த ஆசை அலங்காரம் என்பவர் கோவில் நகை மற்றும் பண வருமான வரவு செலவு கணக்குகளில் மோசடி செய்து அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக தரிசனம் செய்து வரும் இந்த கோவிலில் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாக அவர் மீது குற்றம் சாட்டி அனைத்து சமுதாய முக்கியஸ்தர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கிய டிரஸ்டை பதிவு செய்ய வேண்டும் எனவும், கோவில் நிர்வாகம் தனிப்பட்ட நபரின் கையில் இல்லாமல் டிரஸ்டின் கீழ் செயல்பட வேண்டும், அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கிய நகை பாதுகாப்புக்குழு, நிதி பராமரிப்பு குழு, அமைக்கப்பட வேண்டும். 47 வருடங்களுக்கு முன்பான கணக்கு வழக்குகளை அனைத்து சமுதாயத்தினரும் அடங்கிய கமிட்டிக்கு ஒப்படைக்க வேண்டும். ஜாதி கலவரத்தை தூண்டும் ஆசை அலங்காரம் என்பவர் முயற்சிக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிறுகுடி ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் கோவில் முன்பு அமைதியான முறையில் தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி