திண்டுக்கல், இராமநாதபுரம் பகுதியில் மரியதாஸ் என்பவருக்கு சொந்தமான ஜெராக்ஸ் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இன்று (மார்ச் 27) காலை மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கடையில் இருந்த ஜெராக்ஸ் இயந்திரம், ஸ்டேஷனரி பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின.