நத்தம் - Natham

பெண் வழக்கறிஞர் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு, 4 பேர் கைது

பெண் வழக்கறிஞர் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு, 4 பேர் கைது

திண்டுக்கல்லை சேர்ந்த இந்திரா என்பவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் 9 1/2 ஏக்கர் சாணார்பட்டி, வேம்பார்பட்டி கிராமத்தில் உள்ளது. அதில் தென்னை, வாழை, மாமரம் உள்ளிட்டவற்றை வளர்த்து பராமரிப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று நிலத்தில் தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு பாப்பி (எ) நாகராஜன், உமாராணி, கண்ணன், பாலாஜி, பாப்பா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் வர்ணாஸ்ரீயின் தூண்டுதலின் பேரில் JCB வாகனங்கள் கொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்து மரங்களை வேரோடு பிடுங்கி, சேதப்படுத்தி Tent அமைத்து ஆக்கிரமிப்பு செய்தனர் இதுகுறித்து தகவல் அறிந்து இந்திரா மற்றும் குடும்பத்தினர் நேரில் சென்ற போது கொலை மிரட்டல் விடுத்து கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து அடிக்க துரத்தியதாக இந்திரா கொடுத்த புகாரின் அடிப்படையில் சாணார்பட்டி போலீசார் வழக்கறிஞர் வர்ணாஸ்ரீ உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా