திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேருந்து நிறுத்தம் அருகில் 1000 கோடி டாஸ்மாக்கில் ஊழலை செய்ததாக கூறி ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டிலிருந்து வரும் வழியிலேயே காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் வடமதுரை மேற்கு ஒன்றிய தலைவர் சுதாகர் தலைமையில் வடமதுரை கிழக்கு ஒன்றிய தலைவர் தர்மராஜ் மற்றும் கலைக் கலாச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் M.C. சண்முகம், வடமதுரை மேற்கு ஒன்றிய முன்னாள் தலைவர் நாகராஜ் மற்றும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும் விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அதேபோல் எரியோட்டில் ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் குஜிலியம்பாறையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.