சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவி, நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “நீட் தேர்வினால் 19 மாணவச் செல்வங்கள் இறந்துள்ளனர். அவர்களின் உயிர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?. நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?. நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.