நத்தம் - Natham

திண்டுக்கல்: காய்கறி விலை உயர்வு

திண்டுக்கல்: காய்கறி விலை உயர்வு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் காய்கறிகளின் விலை சனிக்கிழமை உயர்ந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள கிராமங்கள், கரூா், திருப்பூா், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் தக்காளி, முருங்கை, பீட்ரூட், வெண்டைக்காய், அவரைக்காய், புடலைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் 70 சதவீதக் காய்கறிகளை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். மீதியுள்ள 30 சதவீத காய்கறிகளை தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். திங்கள்கிழமை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வார விடுமுறையாக இருந்த போதிலும் சனிக்கிழமை சந்தை செயல்பட்டது. இதேபோல, காய்கறிச் சந்தைக்கு காய்கறிகளின் வரத்தும் அதிகரித்தது. வியாபாரிகள் அதிகளவு காய்கறிகளை கொள்முதல் செய்ததால், இவற்றின் விலை உயா்ந்தது. ரூ.7-க்கு விற்ற ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.17-க்கும், ரூ.23-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40-க்கும், ரூ.30-க்கு விற்ற அவரைக்காய் ரூ.35-க்கும், ரூ.20-க்கு விற்ற பீன்ஸ் ரூ.30-க்கு விற்பனையானது.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా