நத்தம்: தமுமுக மற்றும் மமக சார்பில் இப்தார் நிகழ்ச்சி

75பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மதினாநகரில் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் முகம்மது அடி பக்கர் சித்திக் தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துல் அகது முன்னிலையில் நடந்தது. இதில் முன்னாள் எம் எல் ஏ ஆண்டி அம்பலம், திமுகவைச் சேர்ந்த வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூர் செயலாளர் ராஜ்மோகன், நத்தம் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சேக் ஒலி, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸ்டாலின், குழந்தைவேல்,
விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி உள்ளிட்ட அனைத்து ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜல்வத்தி, அலியார், சேக்முகம்மது உள்ளிட்ட மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி