பென்னாகரம் - Pennagaram

தர்மபுரி: மண்பாண்ட தொழிலுக்கு 153 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி

தர்மபுரி: மண்பாண்ட தொழிலுக்கு 153 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளிலிருந்து விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக வண்டல், களிமண் எடுத்து பயன்படுத்திக்கொள்ள தர்மபுரி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 42 ஏரிகள், ஊரக வளர்ச் சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏரிகள் என மொத்தம் 153 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள ஏரிகள் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டு இணையதளம் வழியாக சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 1431 விண் ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு, அதில் 945 விண்ணப்பங்களுக்கு வட்டாட்சியர் மண் எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது அவ்வாறு இது வரை மொத்தம் 1, 20, 753 கனமீட்டர் வண்டல், களி மண் எடுத்து விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர் கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் மேலும் பயன்பெற விரும்பும் விவசாயிகள். மண்பாண்ட தொழிலாளர்கள் விவசாய நிலங் களை மேம்படுத்தவும், மண்பாண்ட தொழிலை சிறப்புற செய்யவும் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


தர்மபுரி