தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இது வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து சமீப நாட்களாக அதிகரிப்பதும் குறைவதுமாக காணப்பட்டது இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அக்டோபர் 26 இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை அடுத்து மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி, உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 13 வது நாளாக மாவட்ட நிர்வாகம் விதித்த தடை நீடித்து வருகிறது.