தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்

57பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரண்டு வாரங்களாக காவேரி நீர் பிடிப்பு பகுதியில் ஒளிந்து வந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக காணப்பட்டிருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக காவிரி ஆற்றங்கரைகளில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது. இதனை அடுத்து தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நவம்பர் 03 நேற்று ஒகேனக்கலில் குவிந்தனர் இதனால் மெயின் அருவி, சினிஅருவி, தொங்கும் பாலம், முதலைப்பண்ணை, உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி