தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக தமிழக கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் கர்நாடக மாநிலங்களில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதை எடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மழையின் அளவை பொறுத்து அதிகரிப்பதும் குறைவதுமாக காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அக்டோபர் 27 நேற்று மாலை நிலவரப்படி 35, 000 கன அடியாக இருந்த நீர்வரத்து அக்டோபர் 28 இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 26, 000 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து சரிந்துள்ளது. இருப்பினும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து இன்று 16வது நாளாக குளிக்க மற்றும் பரிசளி இயக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் ஆர்வமுடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.