தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு வாரங்களாக தமிழக கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் கர்நாடக மாநிலத்தில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நவம்பர் 1 இன்று காலை 6 மணி அளவில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 7500 அடி வீதம் நீர் வரத்து சரிந்து காணப்பட்டுள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 19வது நாளாக நிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.