தர்மபுரி: ஒகேனக்கலில் சுற்றுலா துறை அமைச்சர் ஆய்வு

85பார்த்தது
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று தருமபுரி மாவட்டத்திற்கு வந்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தருமபுரி அடுத்த வத்தல்மலை சாகச சுற்றுலா மையத்தை ஆய்வு செய்தார். அதன் பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஹோட்டல் தமிழ்நாடு அரசு தங்கும் விடுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் அறைகளின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுற்றுலா துறை மூலம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்த கடைகள் உணவகம் மசாஜ் கூடம் பரிசல் நிறுத்துமிடம் துணி மாற்றும் அறை புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஓட்டல் உணவகம் ஊட்டமலை பரிசல் துறை ஆகிய திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நாடாளுமன்ற உறுப்பினர் மணி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கதிரேசன் தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் பாலகிருஷ்ணன் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி