தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவுதுமாக இருந்த நிலையில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது இந்த நிலையில் 19 நாட்களுக்குப் பிறகு நேற்று நவம்பர் 1 மாலை வினாடிக்கு 6500 கன அடியாக நீர் வரத்து சரிந்ததை அடுத்து தர்மபுரி மாவட்டம் நிர்வாகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்கவும் பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.