தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பென்னாகரம் நகரப் பகுதியில் அமைந்துள்ள சந்தைப்பேட்டையில் செவ்வாய் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம், அக்டோபர் 29 நேற்று நடைபெற்ற வார சந்தையில் சில தினங்களில் தீபாவளி பண்டிகை நடைபெற உள்ளதால் பென்னாகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும் விற்கவும் குவிந்தனர். இதில், சிறிய அளவிலான ஆட்டுக்குட்டிகள் ரூ. 1, 500 முதல் ரூ. 5, 000 வரையிலும், பெரிய அளவிலான ஆடுகள் ரூ. 6, 500 முதல் ரூ. 16, 000 ஆயிரம் வரை என மொத்தம் ரூ. 50 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.