தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளரும் தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் நேரில் சென்று மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை தரம் மற்றும் அளவு சரியாக வழங்கப்படுகிறதா என்று மக்களிடம் கேட்டறிந்தார். மேலும் உணவு பொருட்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஊழியர்களிடம் இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார் இதன் நிகழ்வில் உடன் பாமக நிர்வாகிகள், கட்சிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.