இன்று அக்டோபர் 29 வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி, வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2024-ம் ஆண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. சிறப்பு சுருக்க திருத்தப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 6, 38, 556 ஆண் வாக்காளர்களும், 6, 25, 018 பெண் வாக்காளர்களும், 166 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தமாக 12, 63, 740 வாக்காளர் உள்ளதாக தகவல் வெளியிட்டு வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி வெளியிட்டார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மற்றும் தேர்தல் அதிகாரிகள் கட்சிப் பிரமுகர்கள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.