உங்கள் பிரவுசரில் ஜிமெயிலைத் திறந்து இன்பாக்ஸைக் கிளிக் செய்யவும். சர்ச் பாக்ஸில் 'Unsubscribe' என டைப் செய்து என்டரை அழுத்தவும். இப்போது 'Unsubscribe' என்ற அப்ஷன் கொண்ட அனைத்து புரொமோஷனல் மின்னஞ்சல்களையும் காண்பிக்கும். இந்த புரொமோஷன் மின்னஞ்சல்களை மொத்தமாக நீக்க, மேல் இடது மூலையில் உள்ள சிறிய செக்பாஸை கிளிக் செய்யவும். அப்போது எல்லா மெசேஜும் செலக்ட் ஆகிவிடும் இப்பொது டெலிட் கொடுத்தால் அனைத்தும் டெலிட் ஆகும். இதே போல் மற்ற மெசேஜுகளையும் டெலிட் செய்யலாம்.