நிதிநிலை அறிக்கை வரவேற்கிறேன் என பண்ருட்டி எம்எல்ஏ பேட்டி

77பார்த்தது
ஒன்றிய அரசு உரிய நிதி பங்கீட்டை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் வஞ்சித்த போதும் லட்சக்கணக்கான கோடி கடன்களை கொண்டிருந்த போதும் தமிழ்நாடு அரசு இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மூலம் வாசித்தளித்த நிதிநிலை அறிக்கை ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு 3000-திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டித் தரும் அறிவிப்பு, பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்திட சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, தமிழ், தமிழர் உள்ளிட்டவற்றை மேம்படுத்திட ஏராளமான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது, சாதிவாரி கணக்கெடுப்பு. ஈழத்தமிழர் சகோதரர்களுக்கு இரட்டை குடியுரிமை ஆகிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. ஒட்டு மொத்தமாக பார்க்கையில் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது அதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி