கோடை காலத்தில் நீரிழப்பு மிகவும் பொதுவான பிரச்சனையாகும். உடலின் நீரேற்ற அளவைப் பராமரிக்கவும், சருமத்தைப் பாதுகாக்கவும் சில பழங்கள் மற்றும் காய்கறிகள் உதவுகின்றன. தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களை எடுத்துக்கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், நுங்கு, பானகம், இளநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை குடிக்கலாம். கூல் டிரிங்க்ஸ், அதிக சர்க்கரை கொண்ட பானங்களை தவிர்க்கவும்.