திமுக + தேமுதிக கூட்டணி? பிரேமலதா திடீர் பாராட்டு

60பார்த்தது
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சமீபத்திய கருத்துகளால் திமுக, தேமுதிக கூட்டணி அமையுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. பழனியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, "தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தேமுதிக வரவேற்கிறது. டாஸ்மாக் விவகாரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என அமலாக்கத்துறை அறிவித்தாலும் அது நிரூபிக்கப் பட வேண்டும்" என்று பேட்டியளித்துள்ளார். மேலும், மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசுடன் தேமுதிக கைகோர்த்து போராடும் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி