ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தந்தை பெரியார் வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது சில அறிய காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதில், ராசாளிப் பருந்து ஒன்று, அதைவிட இரு மடங்கு அளவில் பெரியதாக உள்ள சாம்பல் நாரையை வேட்டையாடிப் பிடித்தது. நீர் காகம் மீனை வேட்டையாடி உண்ணுகிறது. புள்ளிமான் ஒன்று அதன் குட்டிக்கு பால் கொடுத்தது. இந்திய மலை அணில்கள் மரத்தில் விளையாடியது பதிவாகியுள்ளது.