அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எப்படி அமையும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவனை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் அவரின் அலுவலகத்தில் சந்தித்து பேசியதாக தெரிகிறது. அதே போல பாமகவின் நிர்வாகிகள் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சந்தித்ததாக கூறப்படுகிறது. இது தேர்தல் கூட்டணிக்கான தொடக்கமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.