மும்பையின் கோரேகான் பகுதியில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. 35 வயதான பணிப்பெண், வீட்டு உரிமையாளரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தாமதமாகத்தான் வெளியே தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அப்பெண் போலீசில்புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், பங்கூர் நகர் போலீசார், 40 வயது குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.