
வடலூர்: துண்டு பிரசுரங்கள் வழங்குதல்
இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி சார்பில் குள்ளஞ்சாவடியில் 20 ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்திற்க்கான அழைப்பிதழ் மற்றும் திமுக ஆட்சியில் நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வடலூர் நகர இளைஞரணி நிர்வாகிகளிடம் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர திமுக செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் வழங்கினர்.