கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் வீரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் பங்கேற்று சிறப்பித்தார். பின்னர் துணை மேயருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.