கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணதிராயபுரத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
இதில் கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் சொரத்தூர் இரா. இராஜேந்திரன் போராட்டத்தில் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு ஆறுதல் கூறி அதிமுக உங்களுடன் நிற்கும் என நம்பிக்கை தெரிவித்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.