
வடக்குத்து: பள்ளியில் ஆண்டு விழா
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.