மதுரை: டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் முருகேசன் (52). இவரை பிப்., 1ஆம் தேதி பைக்கில் ஏற்றி சென்ற சிலர், மங்கம்மாள்பட்டி சுடுகாடு அருகில் மதுவாங்கி கொடுத்து தலையை துண்டித்து உடலை, சுடுகாட்டிலும், தலையை ஒயின்ஷாப் அருகிலும் போட்டு விட்டு தப்பினர். இதில், ராஜசேகர், பார்த்திபன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விஜய் (26), கருப்பசாமி (35), தர்மதுரை (29) ஆகியோரை போலீசார் பிடிக்க முயன்ற போது, கீழே விழுந்து 3 பேரும் கை, கால்கள் முறிந்தது. இந்த கொலையில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.