நெய்வேலியில் விசிக செயற்குழு கூட்டம்
அக்டோபர் 2 ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறுவதை ஒட்டி நெய்வேலி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட பொருளாளர் துரை. மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், மண்டல செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் நெய்வேலி நகரத்திலிருந்து 2000 பேர் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.