கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமம் திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாலசாஸ்தா ஐயப்பன் கோவிலில் நடை இன்று அடைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக 3 நாட்களுக்கு பிறகு வருகிற 30 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.