அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உயிரிழந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற இருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.