ரோலர் ஸ்கேட்டிங் டெர்பி போட்டியில் தமிழக பெண்கள் அணி வெற்றி

81பார்த்தது
ரோலர் ஸ்கேட்டிங் பெடரேக்ஷன் ஆஃப் இந்தியா சார்பில் இந்திய ஸ்கேட் கேம்ஸ் கோவை மற்றும் பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் 7 /08/2024 தேதி முதல் 11/08/2024 தேதி வரை நடைபெறுகின்றன.
இதில் 22 மாநிலங்களில் இருந்து 3000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கோவை வா உ சி பூங்கா ஸ்கேட்டிங் மைதானத்தில் பெண்களுக்கான ரோலர் டெர்பி போட்டி நடைபெற்றது. இதில் நமது தமிழக பெண்கள் அணி கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றது. வெள்ளி பதக்கத்தை கர்நாடக பெண்கள் அணி வென்றது. வெண்கல பதக்கத்தை உத்திரபிரதேச பெண்கள் அணி வென்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. தமிழக அணிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 9 மாணவிகள் பங்கேற்றனர். அதில் நமது கோவை சேர்ந்த நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி V. பாவனா மற்றும் கன்னியா குருகுலம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த M லக்க்ஷனா ஆகிய இரு மாணவிகள் கோவை மாவட்டத்திலிருந்து தமிழக அணிக்கு இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சங்க நிர்வாகிகளும் மற்றும் தமிழக மற்றும் இந்திய ரோலர் டெர்பி பயிற்சியாளர் திருமதி கனகவள்ளி அவர்களும் கோவையை சேர்ந்த பயிற்சியாளர்கள் நந்தகுமார் , கிஷோர் மற்றும் இதர மாவட்ட பயிற்சியாளர்களும் பாராட்டு கூறினார் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி