குளோபல் ஆர்ட்ஸ் அகாடமியின் சர்வதேச அளவில் நடன விழா

67பார்த்தது
மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் நடன விழாக்களை நடத்துகிறது. இந்த ஆண்டு 2024ம் ஆண்டு, குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி நடன விழா ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளில் 2 நாட்கள் கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இது குறித்து குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி யூகே இயக்குனர்கள் செல்லத்துரை பிரதீப் குமார், ஸ்ரீதேவி பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும் பல்வேறு நுண்கலைகளைக் கற்கவும், நிகழ்த்தவும் ஊக்குவிக்கும் ஒரு நிறுவனமாகும். குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி, அமெரிக்காவின் புகழ்பெற்ற அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம் இந்தியா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் சான்றளிக்கப்பட்ட பட்டப்படிப்புகளுடன் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் வழக்கமான நடன விழாக்களை நடத்துகிறது. இந்த ஆண்டு 2024ம் ஆண்டு, குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி நடன விழா ஆகஸ்ட் 10 மற்றும் ஆகஸ்ட் 11ம் தேதிகளில் இந்தியாவின் கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி