சீதாராம் யெச்சூரி மறைவுக்கு கமல் இரங்கல்

63பார்த்தது
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு கமல் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) இன்று (செப்டம்பர்12) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு நடிகரும், மநீம கட்சி தலைவருமான கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தோழர் சீதாராம் யெச்சூரி காலமானதைக் கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். அரசியலில் தனது அழியாத முத்திரையை பதித்தவர். அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி