பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி நிறுவன தின விழா

73பார்த்தது
கோவை பீளமேட்டில் உள்ள பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நிறுவன தினம் 2024 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களை கவுரவிக்கும் வகையில் நிறுவன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கு பி. எஸ். ஜி கல்வி குழுமங்களின் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பாரத் போர்ஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபா நீல்காந்த் கல்யாணி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் இந்திய அரசின் தகவல் ஆணையர் ஆனந்தி இராமலிங்கம், அமெரிக்கா சான் ப்ரன்சிஸ்கோ யாஹூவின் தொழில்நுட்ப இயக்குநர் லோகநாதன் பழனிச்சாமி, பெங்களூரு ஐ. எஸ். ஆர். ஓ இணைய உதவியாளர் இயக்குநர் மற்றும் சிறந்த விஞ்ஞானி கல்பனா அரவிந்த், அமெரிக்கா நியூஜர்சி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வடக்கு அமெரிக்காவின் தலைவர் சுரேஷ் முத்துசாமி, அமெரிக்கா அட்லாண்டா ஒராக்கிளின் வணிக நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் தாமஸ், அமெரிக்கா, டல்லஸ், பவுண்டியஸ் எக்ஸ் அக்கொலைட்இன் நிறுவனர் லீலா கசா ஆகியோருக்கு சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி