பி. எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரி சார்பில் (Indian knowledge system) இந்திய அறிவு அமைப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் கோவை சித்ரா பகுதியில் உள்ள பி. எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பி. எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டி. பிருந்தா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இண்டிக்கா பெங்களூர், ஐ. கே. எஸ் சென்ஞ்மேக்கர் இயக்குநர் ஜி. வி சிவகுமார், சாணக்கிய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சாய் ஸ்வரூபா ஐயர், அனாதி பவுண்டேஷன் சி. இ. ஓ கோமதி வெங்கடாசலம், அனாதி பவுண்டேஷன் இயக்குநர் வெங்கடப்பதி சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பயிலரங்கத்தில் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு, பி. எஸ் ஜி கலை அறிவியல்
கல்லூரி செயலாளர் டீ. கண்ணையன், பி. எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி துணை முதல்வர்கள் எம். ஜெயந்தி எம். உமாராணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.